தமிழ் சினிமாவில் பேய் படங்கள் பல வந்து நல்ல வரவேற்பை பெற்றது. பேய் இயக்குநர் என சமீபத்தில் பேர் பெற்றவர் இயக்குநர் மிஸ்கின். தனக்கான ஒரு பாணியில் பேய் இப்படியும் இருக்கும் என்று காட்டிய படம் பிசாசு. 2016ல் வெளியான பிசாசு படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் மிஸ்கின் பிசாடு 2 வை இயக்கவுள்ளார்.
சமீபத்தில் அப்படத்தின் அதிகார அறிவுப்பான பர்ஸ்ட் லுக் வெளியாது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஆண்டிரியா நடிக்கவுள்ளார். மேலும் சைக்கோ படத்தில் நடித்த ராஜ்குமார் பிச்சுமணியும் நடிக்கவுள்ளார். படப்பிடிப்புகள் ஓரளவிற்கு முடிந்த நிலையில், நடிகை ஆண்டிரியா படத்தில் 10 நிமிட படுக்கையறை காட்சிகளில் நடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அதற்காக பெரிய அளவில் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். அதாவது சாதாரண படங்கள் என்றால் ஆண்டிரியா 70 லட்சம் சம்பளமாக பெறுவாராம். ஆனால் பிசாசு 2வில் படுக்கையறை காட்சிகள் மற்றும் ஆடையின்றி நடிக்கும் காட்சிகள் இருந்ததால் 1.5 கோடி வரை சம்பளமாக வாங்கவிருக்கிறாராம். தற்போது தமிழ் திரையுலக நடிகைகள் இச்செய்தியை கேட்டு அதிர்ந்துள்ளனர்.