சினிமாவில் பிரபலங்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் அது பரபரப்பாக பேசப்படும். அது அந்த கால சினிமாவில் இருந்து காலங்காலமாக வரும் வதந்திகள் தான். அப்படியாக தமிழ் சினிமாவில் பல கிசுகிசுக்களில் சிக்கியவர் நடிகர் கமல் ஹாசன்.
பெரும்பாலும் காதல் கிசுகிசுக்களிலும் சிக்கிய கமல், அவருக்கு அடுத்து அவரின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசனும் சிக்கி வருகிறார். ஆரம்பகாலத்தில் பின்னணி பாடகியாக இருந்து நடிகையாக அவதாரம் எடுத்தார் ஸ்ருதி.
இந்நிலையில் அனுரூத்துடன் ஆரம்பகால சினிமாவில் காதல் கிசுகிசு கசிந்தது. அதற்கு காரணம் இசையமைப்பாளராக விஷ்பரூபம் எடுத்த நேரத்தில் நடிகை ஆண்டிரியா மற்றும் ஸ்ருதிஹாசனுடன் அனிரூத் நெருக்கமாக பழகினார் என சில புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்தவகையில், நடிகை ஸ்ருதி ஹாசனுடன் நெருக்கமாக இரவு பார்ட்டியில் மதுபாட்டிலுடன் எடுத்து கொண்டுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது காதல்ர் சாந்தனுவுடன் டேட்டிங்கில் இருந்து வருகிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.