கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கப்டன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கப்டன் இன்று திங்கட்கிழமை குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
எக்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே கப்பலின் கப்டன் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள கப்டன் ரஷ்ய பிரஜை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்பரப்பில் ஏற்படக் கூடிய இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் வழக்கு விசாரணைகளை முன்னெடுக்கக் கூடிய தனித்துவமான நீதிமன்ற அதிகாரம் எமது நாட்டு சட்டத்திற்கமைய கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமையவே குறித்த கப்டன் இன்று மாலை உயர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். குற்ற விசாரணைப்பிரிவினர் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.