அமெரிக்காவில் பள்ளிக்கூடத்தில் வைத்து பெண் ஆசிரியை மீது பாலியல் தாக்குதல் நடத்திய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டலாஸில் உள்ள ஒரு உயர்நிலை பள்ளியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக பொலிசார் கூறுகையில், எங்களுக்கு உயர்நிலை பள்ளியிடம் இருந்து அவசர உதவி கேட்டு போன் வந்தது.
அங்கு சென்று விசாரித்த போது பெண் ஆசிரியை ஒருவர் மீது மேத்யூ லினோ (56) என்ற ஆசிரியர் பாலியல் தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.
பள்ளிக்கூடத்துக்கு எந்தவொரு மாணவர்களும் வருவதற்கு முன்னர் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அப்போது இந்த இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே வந்துள்ளனர்.
இதை தொடர்ந்து மேத்யூவை கைது செய்துள்ளோம். இந்த சம்பவத்தில் மாணவ, மாணவிகளுக்கு இந்தவொரு பிரச்சினையும் ஏற்படவில்லை என கூறியுள்ளனர்.