நடிகர் ஆர்யா மற்றும் அவரது மனைவி நடிகை சாயிஷா நடிப்பில் உருவாகி, நேரடியாக ஓடிடியில் வெளியான படம் டெடி.
சக்தி சவுந்தரராஜன் இயக்கியிருந்த இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்தது.
இப்படத்தில் இடம்பெறும் டெடி என்கிற பொம்மை கதாபாத்திரம் குழந்தைகள் ரசிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருந்ததால் இப்படத்திற்கு குழந்தைகள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் விரைவில் டெடி படத்தின் 2ஆம் பாகம் உருவாக உள்ளதாக நடிகர் ஆர்யா சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
ஆம், இயக்குனர் சக்தி சவுந்தரராஜன் டெடி இரண்டாம் பாகத்துக்கான ஆரம்பக்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளாராம்.
மேலும் கூடியவிரைவில் இப்படத்தில் நடிக்க ஆவலோடு இருப்பதாகவும் ஆர்யா கூறியுள்ளார். இந்த தகவல் டெடி படத்தின் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.