ஜேர்மனியில் பெண் ஒருவர் அளித்த தகவலின்பேரில் வீடு ஒன்றிற்கு விரைந்த பொலிசார் கண்ட காட்சி அவர்களை மிரளவைத்தது. ஆம், அந்த வீட்டில் ஐந்து பிள்ளைகள், ஒன்றிலிருந்து எட்டு வயது வரையுடையவர்கள், சடலமாக கிடந்தார்கள்.
அப்போது அந்த வீட்டில் யாரும் இல்லை. அந்த பிள்ளைகளின் தாயாகிய Christiane K (28), ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்று உயிர் தப்பினார்.
அவரிடம் விசாரித்தபோது, முகமூடிக் கொள்ளையன் ஒருவன் தன் பிள்ளைகளைக் கொன்று விட்டதாக கூறினார். ஆனால், கொள்ளையர்கள் புகுந்ததற்கான எந்த ஆதாரமும் அந்த வீட்டில் கிடைக்கவில்லை. அத்துடன், அந்த பிள்ளைகளுக்கு மயக்க மருந்துகள் உணவிலும் பானங்களிலும் கலந்துகொடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அவர்களில் சிலர் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டும், சிலர் தலையணையை முகத்தில் அழுத்தியும் கொல்லப்பட்டிருந்தார்கள்.
Christianeக்கு ஆறு பிள்ளைகள் இருந்த நிலையில், அவர்களில் ஒன்று, இரண்டு மற்றும் மூன்று வயதுடைய மூன்று மகள்களும், ஆறு மற்றும் எட்டு வயதுடைய இரண்டு மகன்களும் அவரால் கொல்லப்பட, 11 வயதுடைய ஒரு மகன் பள்ளிக்கு சென்றிருந்ததால், அவன் மட்டும் உயிர் தப்பினான்.
இதற்கிடையில், கணவனைப் பிரிந்த Christianeக்கும் அவரது முன்னாள் கணவருக்கும் இடையில் பிரச்சினை இருந்தது தெரியவந்தது.
Christianeஇன் முன்னாள் கணவன் புதுக் காதலி ஒருவரைத் தேடிக்கொண்டதால் வெறுப்படைந்த Christiane, தன் பிள்ளைகளைக் கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நேற்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.