ஜெர்மனியின் முனிச் நகரில் உள்ள அருங்காட்சியகம் அருகே உள்ள இ்ஸ்ரேல் தூதரகத்திற்கு அருகே துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒருவர் சுற்றித்திரிந்ததுள்ளார்.
சந்தேகத்தின்பேரில் பொலிஸார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்த முற்பட்டவேளை பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இதற்கு பதிலடியாக பொலிஸார் சந்தேக நபரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து பாதுகாப்பு கருதி அங்கு ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டனர்.
இது தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் கூறியதாவது,
முனிச் நகரிலுள்ள இஸ்ரேல் துணைத் தூதரகம் அருகே துப்பாக்கியுடன் வந்த 18 வயது இளைஞா் பொலிஸாரை நோக்கி சுட்டாா். அதையடுத்து, பொலிஸார் திருப்பிச் சுட்டதில் அவா் உயிரிழந்துள்ளார் என கூறியுள்ளனர்.
மேலும், 1972 மியூனிக் ஒலிம்பிக் போட்டியின்போது இஸ்ரேல் விளையாட்டு வீரா்களும் பாலஸ்தீன ஆயுதக் குழுவினரும் சுட்டுக் கொல்லப்பட்ட 52-ஆவது ஆண்டு தினத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எனவே, இஸ்ரேல் துணைத் தூதரகத்தில் தாக்குதல் நடத்தும் நோக்கில் அந்த இளைஞா் துப்பாக்கியுடன் அங்கு வந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கூறினா்.