வவுனியாவில் (Vavuniya) 14 வயது சிறுமி ஒருவர் கர்ப்பமானமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடானது இன்று (7) கிடைக்கப்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் தெரியவருகையில், வவுனியா, ஈச்சங்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த சிறுமி வசித்து வந்துள்ளார்.
முறைப்பாடு
இந்நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி குறித்த இளைஞர் தகாத முறைக்குட்படுத்தியதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாய்க்கு தெரிய வந்த நிலையில் இது குறித்து வெளியில் தெரியப்படுத்தக்கூடாது என அந்த நபர் மிரட்டியுள்ளார்.
தற்போது சிறுமி 6 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் மாவட்ட செயலக சிறுவர் பிரிவு மற்றும் வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சந்தேகநபர்
இது தொடர்பாக வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் வவுனியா தோணிக்கல் பகுதியில் வசித்து வந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.