எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலராஜாவின் (M. Thilagarajah) தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று (07) மடகொம்புற தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
அர்த்தமுள்ள பிரஜைகள் எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய கொள்கை
இதன்போது கருத்து வெளியிட்ட திலகராஜா, “நாங்கள் இந்த நாட்டின் தேசிய இனம் என்றவகையில் கொள்கை வகுப்பதில் நாங்களும் பங்கேற்க முடியும் என இதன் மூலம் அறிவிக்கின்றோம்.
இலங்கை (Sri Lanka) தேசிய கொள்கை பங்களிப்பில் எங்களது கொள்கை மற்றும் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். எங்களிடம் அதற்கான களம் இருக்கின்றது.” என குறிப்பிட்டுள்ளார்.