1000 கிலோ அரிசியை திருடிய இருவர் களுத்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை மத்திய சந்தி பகுதியில் மொத்த அரிசி விற்பனை செய்யப்படும் கடையொன்றில் இருந்து குறித்த சந்தேகநபர்கள் இருவரும் அரிசியை திருடியுள்ளனர்.
சந்தேகநபர்கள் இரவு வேளையில் இரண்டு முச்சக்கர வண்டிகளைப் பயன்படுத்தி இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளமை அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.