ஜேர்மனியில் 15 வயதுச் தமிழ் சிறுமி கடந்த வாரம் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை பெரும் அதிர்சசியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சிறுமி தான் படிக்கும் பாடசாலையில் உள்ள ஏனைய மாணவர்களால் துன்புறுத்தப்பட்டதாக குறித்த மாணவியின் சகோதரி ஜேர்மனியின் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
சிறுமி கடும் விரக்தி
தனது சகோதரி மீது ஆசிரியர்கள் மற்றும் ஏனைய மாணவர்கள் வன்முறையைப் பிரயோகித்ததாகவும் அதனால் சிறுமி கடும் விரக்தியில் இருந்ததாகவும் சகோதரி ஜேர்மனிப் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இதே வேளை குறித்த மாணவியான தருனா தனக்கு சொந்தமான ரிக்டொக் தளத்தில் எனது வாய்கள் கட்டப்பட்டுள்ளன… எனது கண்கள் மூடப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
இவ்விலையில் சிறுமியின் தற்கொலை மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.