யாழ் நாவலர் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் ,மோட்டார் சைக்கிளில் வந்த பெண்கள் வீதியில் தடுமாறி விழுந்த போதும் அதை உதாஸீனம் செய்து இருவர் தப்பியோடயுள்ளனர்.
யாழ் இந்துக்கல்லுாரிக்கும் கொழும்பு இந்துக்கல்லுாரிக்கும் இடையில் கிறிகட் போட்டி யாழ் இந்துக்கல்லுாரி மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியைக் கண்டு களிப்பதற்காக ஏராளமான மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள், அப்பாடசாலையில் பாடசாலையின் கொடிகள் மற்றும் சின்னங்கள் அணிந்தவாறு அப்பகுதி எங்கும் காணப்பட்டனர்.
பொதுமக்கள் விசனம்
இவ்வாறான நிலையில் குறித்த சின்னங்களை உடம்பில் சுற்றிக் கொண்டு, மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்த இருவர் விபத்தை ஏற்படுத்தி தப்பிச்சென்றுள்ளனர்
குறித்த கிறிகெட் போட்டியின் போது நேற்றும் பாடசாலைக்கு அருகில் காணப்பட்ட தனியார் கல்வி நிலையங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பல இடங்களின் அமைதியைக் குழப்பும் வண்ணம் யாழ் இந்துக்கல்லுாரி அடையாளங்கள் அணிந்து சிலர் சேட்டைகளில் ஈடுபட்டதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.