மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள நசிராபாத் பகுதியில், வசிக்கும் 16 வயது சிறுமி தனது பாட்டியின் வீட்டில் தங்கியிருந்தார்.
இதனையடுத்து, அந்த சிறுமியின் உறவினர் ஒருவருக்கு அங்குள்ள ஒரு மண்டபத்தில் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த திருமண விழாவில் கலந்து கொள்ள சிறுமி சென்றுள்ளார்.
அப்போது திருமண விழாவில் கலந்து கொண்ட ஒரு சிறுவன், சிறுமிக்கு மயக்க மருந்து கலந்த தேனீரைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், சிறுமி தன் சுயநினைவை இழந்துள்ளார்.
அப்போது அந்த சிறுவன் அந்த சிறுமிக்கு முதலுதவி செய்வது போல திருமண மண்டபத்திற்கு அருகேயுள்ள வயலுக்கு அழைத்துச் சென்று வன்கொடுமை செய்துள்ளான்.
இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமி யாரிடமும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், சமீபத்தில் சிறுமிக்கு திடீர் வயிற்றுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு மருத்துவ பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமி கொடுத்த தகவலின்பேரில் மருத்துவமனை மூலமாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை கைது செய்துள்ளனர்.



















