ஒரு குறிப்பிட்ட காலத்தில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் நாட்டில் கோவிட் 19 தொற்றுக்களின் எண்ணிக்கையில் கணிசமான குறைவு ஏற்படும் வரை பொது ஒன்று கூடல்களுக்கு அனுமதி வழங்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய்கள் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே இதனை தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளின் அறுவடையை பெற்றுக்கொள்ள சிறிது காலம் செல்லும் என்று தெரிவித்தார்.
அதுவரை, கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
“கோவிட் 19 தொற்றுகளின் எண்ணிக்கை சற்று குறைந்துவிட்டாலும், இறப்புகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைவதற்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஆகும் என்று அவர் குறிப்பிட்டார்.