கனடாவில் குப்பைமேடு ஒன்றிலிருந்து கிடைத்த ஒரு ஓவியம் ஒரு பிரபலம் வரைந்தது என்பதை புரிந்துகொண்ட ஒரு பெண், அதை ஏலத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
வடக்கு ஒன்ராறியோவிலுள்ள குப்பை மேடு ஒன்றில் கிடைத்த ஒரு ஓவியத்தை, அங்கேயே 5 டொலர்களுக்கு வாங்கியிருக்கிறார் ஒரு பெண். பின்னர் அதைக் குறித்து இணையத்தில் ஆய்வு செய்ததில், அது பிரபல பிரித்தானிய இசைக்கலைஞரான David Bowie என்பவர் வரைந்த ஓவியம் என்பது அவருக்கு தெரியவந்துள்ளது.
அதை அவர் ஏல நிறுவனம் ஒன்றுக்கு கொண்டு சென்றுள்ளார். அவர்கள் அது உண்மையாகவே David Bowie வரைந்ததுதானா என்பதை உறுது செய்துகொள்ள ஒரு நிபுணரை அழைத்துள்ளார்கள்.
அவரும் அது உண்மையான David Bowie ஓவியம்தான் என்பதை உறுதி செய்துள்ளார். பொதுவாக இதுபோன்ற ஓவியங்கள் 9,000 முதல் 12,000 டொலர்கள் வரை விலைபோகும்.
சமீபத்தில், David Bowie வரைந்த ஓவியங்கள் 30,000 டொலர்கள் வரை விலைபோயுள்ளதால், அந்த ஓவியத்தைக் கண்டுபிடித்த பெண் மகிழ்ச்சியடைந்துள்ளார். பின்னே, 5 டொலருக்கு வாங்கிய ஓவியம் குறைந்தது 12,000 டொலருக்கு விற்கப்பட்டால் சந்தோஷம் ஏற்படாதா என்ன?