அமெரிக்கா ஜனாதிபதியான ஜோ பைடன், புடின் சந்திப்பின் போது அவருக்கு கொடுத்த பரிசு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கிடையே பல ஆண்டுகால மோதல் உள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டிரம்ப் ரஷ்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரஷ்ய பொருட்கள் அமெரிக்காவில் விற்க கட்டுப்பாடுகளை விதித்தார்.
இது ரஷ்ய அதிபர் புடினுக்கு கடும் அதிருப்தியை கொடுத்தது. மேலும் டிரம்ப்பிடம் இது குறித்து கேட்ட போது, ரஷ்யாவின் நட்பு நிரந்தரமாக முறிந்துவிட்டது என்று கூறினார்.
இதையடுத்து, தற்போது அமெரிக்காவின் புதிய அதிபரான ஜோ பைடன் ரஷ்ய அதிபர் புடினை சுவிஸில் சந்தித்த இருநாட்டு உறவு குறித்து விரிவாக ஆலோசித்தார்.
அபோது, ரஷ்ய அதிபர் புடினுக்கு ஜோ பைடன் தனக்கு விருப்பமான Randolph கண் குளிர் கண்ணாடியை பரிசாக அளித்துள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
இந்த கண்ணாடியின் கார்னர் 23 கரெட் தங்க பூச்சால் ஆனவை. இதன் மதிப்பு 299 டொலர்(இலங்கை மதிப்பில் 59,435 ஆயிரம் ரூபாய்) என அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
மேலும், அமெரிக்க தேர்தல் பிரசாரத்தின்போது ஜோ பைடனை ரேபான் ஏவியேட்டர் குளிர் கண்ணாடி அணிந்தபடியே பார்க்க முடிந்தது குறிப்பிடத்தக்கது.