மருதங்கேணி இயக்கச்சி பகுதியில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் பாரிய படை முகாம் ஒன்றை ஸ்ரீலங்கா அரசாங்கம் அமைத்து வருவதாக தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த படை முகாமில் கனரக யுத்த வாகனங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறையில் நேற்று முன்தினம் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த சிவாஜிலிங்கம், யாருடன் யுத்தம் புரிவதற்கான முன்ஏற்பாடுகளை அரசாங்கம் செய்கின்றது என கேள்வி எழுப்பியுள்ளார்.