நாடு முழுவதும் கடந்த ஒரு மாத காலமாக அமுலில் இருந்த பயணக்கட்டுப்பாடு இன்று முதல் கடுமையான சுகாதார ஒழுங்கு விதிகளுடன் தளர்த்தப்படவுள்ளது.
இதன்படி இன்று அதிகாலை 4 மணிக்கு பயணக்கட்டுப்பாடு தளர்த்ப்பட்ட பின்னர் எதிரவரும் 24ஆம் திகதி வரவுள்ள பொசன் போயா தினத்தையொட்டி 23ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் பயணக்கட்டுப்பாட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாட்டில் ஆபத்தான டெல்டா திரபு வைரஸ் பரவி வருகின்றதுடன், தினசரி 2000இற்கும் மேற்பட்ட தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
இந்த நேரத்தில் எந்தவித திட்டமிடலுமின்றி கட்டுப்பாடுகளை நீக்குவதால் பேராபத்து ஏற்படும் என இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் எச்சரித்துள்ளது.