மனைவியின் தவறான தொடர்பை கண்டித்த கணவனை, மனைவியும் அவரது காதலனும் சேர்ந்து கொலை செய்து வீசியுள்ள சம்பவம் நடந்துள்ளது.
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் மன்படகானில் பிரவீன் பாட்டில்(30). இவரது மனைவி லக்ஷ்மி பாட்டீலோடு(22) வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த பெண் லஷ்மி ஒரு ஆட்டோ ட்ரைவராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு சன்னி சாகர் மற்றும் அரவிந்த் ஆகிய இரு வாலிபர்களுடன் கள்ள தொடர்பு ஏற்பட்டது.
அவர்கள் ஆட்டோவிலேயே தனிமையில் இருந்துள்ளனர். இதனை அவரது கணவர் அவதானித்ததால் கண்டித்துள்ளார். ஆனால் மனைவி லஷ்மி தன்னுடைய கணவரை அவரின் காதலனோடு சேர்ந்து தீர்த்து கட்ட முடிவெடுத்தார்.
பின்பு ஜூன் 4ம் தேதி தனது கணவர் பிரவீன் பாட்டீல் தூங்கும்போது, காதலன் அரவிந்தோடு சேர்ந்து கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, உடலை அங்குள்ள குப்பைத் தொட்டியில் வீசியுள்ளனர்.
பின்னர் தனது கணவரைக் காணவில்லை என்று பொலிசாரிடம் புகாரும் அளித்துள்ளார் லஷ்மி. மறுநாள் அந்த பகுதி மக்கள் ப்ரவீனுடைய உடல் குப்பை தொட்டியில் அழுகிய நிலையில் கிடப்பதை பார்த்து பொலிசாருக்கு புகார் கொடுத்துள்ளனர்.
சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள பொலிசார், மனைவி லஷ்மி மற்றும் அரவிந்த் தான் காரணம் என்று கண்டுபிடித்து அவர்களைக் கைது செய்துள்ளனர்.