புறக்கோட்டை கொழும்பு பிரதான வீதியில் அனைத்து கடைகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸார் அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.
அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கும் கடைகளை தவிர ஏனைய அனைத்து கடைகளையும் மூடுமாறு பொலிஸாரினால் அறுவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
ஒரு மாத காலமாக இலங்கையில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் சில கட்டுப்பாடுகளுடன் பயணத்தடை தளர்த்தப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் புறக்கோட்டை பகுதியில் கள நிலவரங்களை ஆராய்ந்த போதே இந்த விடயம் பொது மக்களால் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.