தென்னிலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நபர் ஒருவர் சடலம் தகனம் செய்யும் இடத்திற்கு கொண்டுவரப்பட்டு மீண்டும் கொண்டு செல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
களுத்துறை வஸ்கடுவயில் உள்ள தகன நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட கே.டீ.ஜயசேன என்ற 85 வயதுடைய நபரின் சடலமே இவ்வாறு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபரின் சடலம் பிற்பகல் 12 மணி நேரம் ஒதுக்கிக் கொள்ளப்பட்டது. அதற்காக 11.30 மணியளவில் தகனம் செய்யும் இடத்தை வந்தடைந்துள்ளனர். எனினும் சுகாதார பரிசோதகர் உட்பட சுகாதார பரிவு ஊழியர்களின் தாமதம் காரணமாக சடலம் பிற்பகல் 2 மணிக்கே கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் பிற்பகல் 2 மணிக்கு மற்றுமொரு சடலத்தை தகனம் செய்ய ஒதுக்கப்பட்டிருந்தது. 1.50 மணியளவில் குறித்த சடலத்துடன் கிட்டத்தட்ட 40 பேர் வரையில் தகனம் செய்யும் இடத்திற்கு வருகைத்தந்துள்ளனர்.
கொவிட் சடலத்தை கொண்டு வந்த அம்பியுலன்ஸ் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கே இந்த சடலமும் கொண்டுவரப்பட்டுள்ளது. அம்பியுலன்ஸில் கொவிட் சடலம் இருப்பதனை அறிந்து கொண்ட அந்த மக்கள் அங்கிருந்து ஒட்டம்பிடிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் அவ்விடத்தில் பாரிய குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது.
இறுதியில் சுகாதார அதிகாரியின் ஆலோசனைக்கமைய கொவிட் தொற்றாத சடலம் முதலில் தகனம் செய்யப்பட்டுள்ளது. மாலை வேலையில் கொவிட் சடலத்தை தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.