சுறுசுறுப்பாகச் சுற்றி வரும் ஒரு பெண்ணை மாதவிடாய், சட்டென்று முடக்கிவிடும். அந்தச் சமயத்தில் ஏற்படும் பல்வேறு உபாதைகள் பெண்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வடைய வைத்துவிடும்.
மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் உபாதைகள் எப்போதும் ஒரேமாதிரி இருப்பதில்லை. நபருக்கு நபர் வேறுபடும்.
பொதுவாக அனைவரும் வயிற்றுவலியை உணர்வது வழக்கம்.இந்த சமயங்களில் கண்ட உணவுகளை சாப்பிடமால் ஒரு சில இயற்கை ஆயுர்வேத பானங்களை குடித்தால் நல்லது.
அந்தவகையில் தற்போது மாதவிடாய் வலியை குறைக்கும் சூப்பரான ஆயுர்வேத பானம் ஒன்றை எப்படி தயாரிப்பது என பார்ப்போம்.
தேவையானவை
தண்ணீர் – 4 கப்
ஃப்ரெஷ்ஷாக இருக்கும் இஞ்சி – 2 அங்குலம் அளவு
துளசி இலைகள் – 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
புதினா இலை- அரை கைப்பிடி
இலவங்கப்பட்டை – சிறு துண்டு
செய்முறை
இஞ்சியை தோல் சீவி நறுக்கி அரைத்து வைக்கவும். துளசி இலையை சுத்தம் செய்து மசித்து விடவும். பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்த உடன் வெப்பத்தை குறைவாக வைக்கவும்.
அரைத்த இஞ்சி, துளசி, எலுமிச்சை சாறு புதினா இலை சாறு, இலவங்கப்பட்டை குச்சி சேர்க்கவும். பிறகு 10 நிமிடங்கள் வரை வைத்து குறைவான வெப்பத்தில் வைக்கவும். பிறகு இதை இறக்கி இவை வெதுவெதுப்பாக குறைந்ததும் இனிப்புக்கு தேவையெனில் தேன் சேர்த்து கலக்கவும்.
தொடர்ச்சியான பிடிப்பு நிவாரணத்துக்கு நாள் முழுவதும் மூன்று முறை இந்த தேநீர் குடிக்கலாம். மாதவிடாய் சுழற்சி தொடங்குவதற்கு 2 முதல் 3 நாட்களுக்கு முன்பு தினமும் இதை குடித்து வரலாம்.
மாதவிடாய் சுழற்சி நாட்களிலும் இதை குடித்து வரலாம். சிலருக்கு மாதவிடாய் நாட்களில் தசைபிடிப்பு தாண்டி உடலில் செரிமானப்பிரச்சனைகள் சரி ஆகும்.
சிலருக்கு இந்த நாட்களில் குமட்டல் உணர்வு இருக்கும். இவர்களுக்கும் இந்த தேநீர் நிவாரணம் அளிக்க கூடும். மாதவிடாய் கால வலியை முழுவதுமாக தவிர்க்க முடியாது என்றாலும் தீவிரமாகாமல் தடுக்க இந்த ஆயுர்வேத தேநீர் உதவியாக இருக்கும்.