சுபீட்சத்தின் நோக்கு என்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்திற்கமை ஒரு லட்சம் இளைஞர்கள் தொழில்முனைவோராக முன்னேறுவதற்காக காணி வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார் செய்யப்பட்டு வருவதாக காணி அபிவிருத்தி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இந்த வேலைத்திட்டத்திற்கு பாரிய தடைகள் வந்த போதிலும் அதற்கு முகம் கொடுத்து முன்னோக்கி கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு, கோட்டை பிரதேசத்தில் பெறுமதியான காணிகளை விற்பனை செய்ய தயாராகும் விடயம் குறித்த தெரியும். இந்த அபிவிருத்தி திட்டம் நாட்டு மக்களின் இணைப்புடன் எவ்வாறு பொருந்துகின்றதென்பது குறித்து சிந்திக்க வேண்டும்.
கோட்டை பிரதேசம் என்பது வரலாற்று பிரதேசமாகும். அத்துடன் மக்கள் வாழும் பிரதேசமாகும். மக்களை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு யாருக்காக அபிவிருத்தி செய்வது.
சுற்றுசூழலை பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு விடயங்களை செய்ய முடியும். சில அபிவிருத்தி நடவடிக்கைகளில் சிறிய அளவிலான மக்கள் மாத்திரமே நன்மை பெறுகின்றார்கள். எனினும் அனைத்து மக்களும் நன்மையடையும் வகையில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.