என்ன செய்தாலும் உடல் எடை குறையவில்லையே என நம்மில் பலர் பலவிதமான கடின முயற்சிகளை கையிலெடுத்தும் வருத்தப்படுவது வழக்கம்.
உடல்பருமன் பலவிதமான நோய்களுக்கும் வழிவகுப்பதோடு, வீண் பணம் செலவு, மன சோர்வு, தவறான உணவுப் பழக்கம் ஆகியவற்றுக்கும் வழிவகுக்கிறது.
ஆனால் நாம் அன்றாடம் வீடுகளில் பயன்படுத்தும் சீரகம் மற்றும் ஓமம் ஆகியவை உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
இந்த இரண்டையும் ஒன்றாக உட்கொள்வதன் மூலம், நீங்கள் மிக வேகமாக உடல் எடையை குறைக்க முடியும். சீரகத்தில் அழற்சி எதிர்ப்பு ( Anti-Inflammatory) கூறுகளும், ஓமத்தில் இரும்பு, கால்சியம், ஃபைபர், பாஸ்பரஸ் தவிர, பல ஊட்டச்சத்துக்களும் உள்ளன.
இரண்டு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சீரகம் மட்டும் ஓமத்தை ஒன்றாக போடவும். அவை பாதியான உடன் அதனுடன் தேன் சேர்த்து பருகினால் விரைவில் உடல் எடை குறையும்.