எல்லை தாண்டி வந்த பிரித்தானியா போர்க்கப்பலுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக துப்பாக்கிச் சூடு நடத்திய விரட்டி அனுப்பியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
கருங்கடல் பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது.
ஜூன் 23ம் திகதி காலை 11:52 மணிக்கு கருங்கடலின் வடமேற்கு பகுதியில் செயல்பட்டு வரும் பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் HMS Defender போர்க்கப்பல், எல்லையை மீறி, சுமார் 3 கி.மீ தூரத்திற்கு ரஷ்ய கடல்பகுதியான Cape Fiolent பிராந்தியத்தில் நுழைந்துள்ளது.
இதனையடுத்து, ரஷ்யாவின் போர்க்கப்பல் எச்சரிக்கை விடுக்கும் விதமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது என பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடற்படை நடவடிக்கையுடன், ரஷ்ய Su-24M போர்விமானம் பிரிட்டிஷ் போர்க்கப்பலுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக குண்டு போட்டது.
இதனையடுத்து, பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் HMS Defender போர்க்கப்பல் ரஷ்ய எல்லையை விட்டு வெளியேறியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மாஸ்கோவில் உள்ள பிரித்தானியா தூதரகத்திற்கு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ நட்பு நாடுகளை கருங்கடல் பிராந்தியத்தில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு ரஷய வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.