பிரித்தானியா மருத்துவமனைகளில் வென்டிலேட்டர் படுக்கைகளில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த வாரத்தில் 41% அதிகரித்துள்ளது என்று NHS Providers-ன் துணை தலைமை நிர்வாகி Saffron Cordery தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா மாறுபாடு பிரித்தானியாவில் பரவி வருகிறது.
இதன் காரணமாக பல நாடுகள் மீண்டும் பிரித்தானியா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியுள்ளன.
இந்நிலையில் தனியார் ஊடகத்துடனான நேர்காணலில் கலந்துக்கொண்டு உரையாற்றிய NHS Providers-ன் துணை தலைமை நிர்வாகி Saffron Cordery, உண்மையில் முன்கள பணியாளர்கள் மீதான நம்பிக்கை பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறது.
மோசமடையும் நிலைமையை சமாளிப்பதற்கான திட்டங்கள் அவர்களிடம் உள்ளன. ஆனால் கொரோனா தொற்றுகள் அதிகரிப்பு மற்றும் அவசர சிகிச்சைக்கான தேவை அதிகரித்து வருவதால், அது சவாலாக உள்ளது.
சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி, வென்டிலேட்டர் படுக்கைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த வாரம் 41% உயர்ந்துள்ளது.
எனவே இது கொரோனா மீண்டும் எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான வலுவான அறிகுறியாகும். குளர்காலத்தில் வழக்கமாக ஏற்படும் காய்ச்சல் மற்றும் சுவாச வைரஸ்கள் போன்றவற்றுடன், கொரோனா தொற்றும் மேலும் அதிகரித்தால், அதை எப்படி எதிர்ககொள்ளப் போகிறோம் என்ற சவாலை கருதி மிகவும் கவலைப்படுகிறோம்.
அவசர சிகிச்சைக்கான தேவையின் இந்த திடீர் உயர்வையும் கவனிக்க வேண்டும் என NHS Providers-ன் துணை தலைமை நிர்வாகி Saffron Cordery கூறியுள்ளார்.