ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் உலக மக்கள் கொரோனாவில் இருந்து விடுபட வேண்டி அங்கப்பிரதட்சணம் செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீமவரம் பகுதியை சேர்ந்த மாதவி என்ற பெண் கடந்த 5 நாட்களாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கிரிவல பாதையில் ஒரு நாளைக்கு 2 கிலோ மீட்டர் வீதம் அங்கப்பிரதட்சணம் செய்து வருகிறார். தற்போது, ஊரடங்கால் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், ஆந்திர மாநிலம் பீமவரம் பகுதியை சேர்ந்த மாதவி என்ற பெண் கொரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபட வேண்டி கடந்த 5 நாட்களாக ஒரு நாளைக்கு 2 கிலோ மீட்டர் வீதம் கிரிவலப் பாதையில் அங்கப்பிரதட்சணம் செய்து வருகிறார்.
இவர், ஏற்கனவே உலக நன்மைக்காக 3 முறை கிரிவலப்பாதையில் அங்கப்பிரதட்சணம் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.