உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
கடந்த ஜூன் 18-ஆம் தேதி தொடங்கிய இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 217 கண்களும் நியூசிலாந்து அணி 249 ரன்களும் எடுத்தன. இப்போட்டி கடந்த 5 நாட்களில் இரண்டு நாட்கள் மழையின் காரணமாக ஆட்டம் முழுவதும் ரத்து செய்யப்பட்டதால் என்று ஆறாவது நாள் ஆட்டம் நடைபெற்றது.
முதல் இன்னிங்சில் இந்திய அணி 217 ரன்களும், நியூசிலாந்து அணி 249 ரன்களும் எடுத்தன. 32 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியாக 73 ஓவர்களில் அந்த அணி 170 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
அதிகபட்சமாக இந்திய அணி தரப்பில் ரிஷப் பண்ட் 41 ரன்களும், நியூஸிலாந்து தரப்பில் டிம் சவுதி 4 விக்கெட்டுகளும் எடுத்தனர். ஏற்கனவே 32 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 138 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
இந்த இலக்கை 45.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து நியூசிலாந்து அணி எட்டியது. இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றி அந்த அணி அசத்தியுள்ளது.