கொவிட் தொற்றாளர்கள் 135 பேர் இதுவரையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கொவிட் நிலைமை தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். நேற்று வரையில் 1704 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை கொவிட்டின் முதலாம் இரண்டாம் அலைகளில் 609 மரணங்களில் பதவியாகிய போதிலும் மூன்றாவது அலையில் மரணங்களின் எண்ணிக்கை பாரியளவு அதிகரித்துள்ளது. அதற்கமைய புத்தாண்டின் பின்னர் ஏற்பட்ட கொவிட் அலையினால் 2095 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் கடந்த 13ஆம் திகதியில் இருந்து 20ஆம் திகதி வரை நாளாந்த மரணங்கள் 50க்கும் மேல் என கூறப்படுகின்றது. எனினும் கடந்த 21ஆம் திகதிக்கு பின்னர் மரணங்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஒன்றை காண முடிவதாக தெரிவிக்கப்படுகின்றது.