எந்தவொரு சட்டவிரோத செயலுக்காகவும் கைது செய்யப்பட்ட எந்தவொருவருக்கும் இன்று பொலிஸ் பிணை வழங்கப்படாது என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹான தெரிவித்துள்ளார்.
அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
அசையும் சொத்து ஒன்றைக் கைது செய்யப்படும் சந்தேக நபர் எடுத்துச் சென்றால் அது பறிமுதல் செய்யப்படும். அது அசையாச் சொத்தாக இருந்தால் சட்டரீதியாகச் சீல் வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கோவிட் தடுப்புக்காக நேற்று இரவு 10.00 மணியுடன் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் நாளை (25) அதிகாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அத்தியாவசிய சேவைகளுக்கு அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியும் என்றும் பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார்