நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகராக விளங்குபவர், இவர் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான கர்ணன் திரைப்படம் சிறந்த விமர்சங்களை பெற்று வெற்றியடைந்தது.
அதனை தொடர்ந்து சமீபத்தில் ஜகமே தந்திரம் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பில் நேரடியாக Netfilx-ல் வெளியாகி கலவையான விமர்சங்களையே அதிகமாக பெற்றது.
மேலும் அடுத்தடுத்து The Gray Man, நானே வருவேன், D43 உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து முடிக்கவுள்ளார் நடிகர் தனுஷ்.
இதனிடையே ஜெ. ஜெயலலிதா, ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய நபர்களை தொடர்ந்து சென்னை போயஸ் கார்டனில் நடிகர் தனுஷ் சொந்தமாக பெரிய இடம் ஒன்றை வாங்கியிருந்தார்.
மேலும் அங்கு தனுஷின் புதிய வீட்டின் கட்டிடப் பணிகளைத் தொடங்குவதற்காக நடத்தப்பட்ட பூஜையில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தனுஷின் புதிய வீடு ரூ.150 கோடி செலவில் கட்டப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வீட்டில் ஒரு நீச்சல் குளம், ஒரு முழுமையான உடற்பயிற்சி கூடம், ஒரு உட்புற விளையாட்டு வசதி, எதிர்கால தொழில்நுட்பத்துடன் கூடிய ஹோம் தியேட்டர் போன்றவற்றை வடிவமைத்துள்ளதாக கூறப்படுகிறது.
சர்வதேச தரத்தில் உருவாக்கப்படும் அந்த வீட்டின் பணிகள் முடிந்தவுடன், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பிரம்மாண்ட திறப்பு விழா நடத்த திட்டமிட்டவுள்ளார்களாம்.