சிறு வயதில் இருந்தே நாம் கம்யூட்டர் பார்த்து பயன்படுத்திய OS என்றால், நிச்சயமாக WINDOWS OSஐ சொல்லலாம். உலக அளவில் அதிகப்படியான மக்கள் பயன்படுத்தி வந்த OS-WINDOWS OS என்று கூட சொல்லலாம்.
அப்படி இவர்கள் அடுத்த ஜெனரேஷன் என்று புதிய OS-ஐ அறிமுகம் செய்துள்ளனர். அதாவது WINDOWS 10-ஐ தொடர்ந்து, தற்போது WINDOWS 11 அறிமுகம் செய்துள்ளனர்.
அதில் இருக்கும் ஒவ்வொரு சிறப்பம்சங்களைப் பற்றி பார்ப்போம்.
WINDOWS 10 மற்றும் WINDOWS 11 இருக்கும் வேற்றுமை
இந்த இரண்டு OS-க்கும் இடையே இருக்கும் வேற்றுமை எதுவும் அந்தளவிற்கு இல்லை.
கிட்டத்தட்ட இரண்டுமே ஒரே மாதிரி தான் இருக்கிறது. WINDOWS XP-யில் இருந்து WINDOWS 7-ஆக இருக்கட்டும், அடுத்து WINDOWS 8- ஆக இருக்கட்டும் அல்லது 10-ஆக இருக்கட்டும், இவை அனைத்திலும் மிகப் பெரிய ஒரு ஜம்ப், அதாவது ஒரு மிகப் பெரிய மாற்றம் இருந்தது.
ஆனால் WINDOWS 10 மற்றும் WINDOWS 11-க்கும் எந்த ஒரு மிகப் பெரிய மாற்றம் இல்லை. ஒரு WINDOWS 10 பயன்படுத்துபவர்களிடம் ஒரு WINDOWS 11-ஐ கொடுத்தால், அது மிகப் பெரிய மாற்றமாக இருக்காது.
Design WINDOWS 11
டிசைனைப் பொறுத்தவரை சொல்ல வேண்டும் என்றால் அது வெற லெவலில் இருக்கிறது, முன்பு எப்போது போன்று இருக்கும் டிசைன் போன்று இல்லாம, ஒரு MIRROR பினிசிங் போன்று கொடுத்துள்ளனர்.
அது பார்க்கவே மிகவும் அழகாக இருக்கிறது. அதே சமயம் விண்டோஸ் விஸ்டாவை பயன்படுத்தியவர்களுக்கு, WINDOWS 11 கொஞ்சம் பயன்படுத்த ஈசியாக இருக்கும், ஏனெனில் அதே போன்று தான் இருக்கிறது.
சிறப்பம்சங்கள்
பொதுவாக WINDOWS OS-ஐ பொறுத்தவரை START MENU இடது கை பக்கம் இருக்கும், ஆனால் இந்த முறை WINDOWS 11-ல் START MENU நடுவில் கொண்டு வரப்பட்டுள்ளது. இது பார்க்கவும் நன்றாக இருக்கிறது.
உங்களுக்கு தேவையில்லை என்றால் நீங்கள் அதை இடது கை பக்கம் கொண்டு சென்று வைத்து கொள்ளலாம். இந்த START MENU-வில் நீங்கள் சென்றால், தற்போது என்னென்ன ஆப்ஸ் எல்லாம் பயன்படுத்துனீர்கள் போன்றவற்றை எல்லாம் காட்டிவிடுகிறது. இதுவும் பார்க்க கொஞ்சம் புதிதாகவும், வித்தியாசமாகவும் இருக்கிறது.
windows management control
நீங்கள் ஒரு மல்டி டாஸ்க் பயனாளர் என்றால், இது உங்களுக்கு தான், ஏனெனில் ஒரு லேப்டாப்போ அல்லது கம்ப்யூட்டர் இருக்கட்டும். ஏனெனில் நீங்கள் இதிலே மல்டி டாஸ்க் செய்து கொள்ளலாம்.
அதாவது Maximize இருக்கும் இடத்தில் சென்று சற்று அழுத்தினால், அங்கு நீங்கள் எந்தெந்த முறையில் ஸ்கிரீனை வைத்து பார்க்க விரும்புகிறீர்களோ அப்படி வைத்து பார்த்து கொள்ளலாம்.
அதிகபட்சமாக ஒரு ஸ்கிரீனை நான்காக பிரித்து பார்க்க முடியும், இது ஒரு மீட்டிங் நடக்கும் போதோ அல்லது ஒரு வீடியோ கால் பேசும் போது, அதை மினிமைஸ் செய்து சில விஷயங்களை பார்த்து பேச மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
windows Memorisation
இது லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் இணைத்து பயன்படுத்துவோருக்கு ஒரு வரப்பிரசாதம். அதாவது லேப்டாப்பில் ஒரு ஆப்பை பயன்படுத்துகிறீர்கள்,
அதன் பின் கம்ப்யூட்டரில் ஒரு ஆப்பை பயன்படுத்துகிறீர்கல் என்றால், அதில் கனெக்டரை நீங்கள் எடுத்துவிட்டால். லேப்டாப்பிலோ அல்லது கம்ப்யூட்டரிலோ நீங்கள் பயன்படுத்திய அனைத்து ஆப்களும் காட்டப்படும். முன்பு இருந்த விண்டோஸில் இந்த ஆப்சன் இல்லை.
Android Apps
முன்பு இருக்கும் விண்டோஸ்களில் ஆண்ட்ராய்டு ஆப்களை பயன்படுத்த முடியும் தான்,
இருப்பினும் இப்போது வந்திருக்கும் இந்த விண்டோஸ் 11-ல் நீங்கள் நேரடியாக ஆண்ட்ராய்டு ஆப்களை டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், இது பிளே ஸ்டோரில் கிடையாது,
அமேசானின் பிளே ஸ்டோரில் சென்று டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
விலை மற்றும் இலவசம்
விண்டோஸின் அதிகாரப்பூர்வ OS-ஐ நீங்கள் வைத்திருந்தீர்கள் என்றால், இதை நீங்கள் இலவசமாக UPDATE செய்து கொள்ளலாம். அதே சமயம் இந்த விண்டோஸ் 11 உங்கள் கம்ப்யூட்டரோ அல்லது லேப்டாப்பிற்கு செட் ஆகுமா? ஆகாது என்பதை அறிவதற்கு அவர்களோ ஒரு லிங்க் கொடுத்துள்ளனர். அதை கிளிக் செய்து பார்த்தாலே போதும்.