இயக்குனர் ஷங்கரின் மகளான ஐஸ்வர்யா ஷங்கர் – ரோஹித் தாமோதரன் தம்பதியினருக்கு இன்று திருமணம் நடைபெற்றது.

இந்திய திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – ரோஹித் தாமோதரன் திருமணம் இன்று காலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் நடைபெற்றது.

கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மணமகளின் பெற்றோர் மற்றும் மிக முக்கிய சொந்தங்கள் மட்டுமே பங்கேற்றனர்.
இந்த திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான .உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றனர்.



















