வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வோருக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் வாரம் முதல் இவ்வாறு தடுப்பூசி ஏற்றப்படும் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் மங்கள ரன்தெனிய தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லும் இலங்கையர்களுக்கு தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் நாட்களில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட உள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள 1989 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.



















