முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் மாஸ்டர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்து இருந்தார்.
இவருக்கு தமிழில் டப்பிங் கொடுத்தது ரவீனா என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால், மாஸ்டர் படத்தின் மலையாள பதிப்பில் மாளவிகா மோகனனுக்கு டப்பிங் கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சுஜிதா என்று தற்போது தெரிய வந்துள்ளது.
இதனை சுஜிதாவே சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார்.




















