44 – 45 வார இடைவெளியில் மனித உடலில் செலுத்தப்படும் எஸ்ட்ரா செனெகா தடுப்பூசியின் இரண்டாம் மருந்தளவுகள் 8-12 வாரங்கள் இடைவெளியில் வழங்கப்படும் தடுப்பூசியை விட கிட்டத்தட்ட உடலில் நான்கு மடங்கு பிறபொருள் எதிரிகளை உருவாக்குவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வெளியிடப்பட்ட தடுப்பூசி தயாரிப்பாளர்களான, ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி குழுமத்தின் அறிக்கையில் இது கூறப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
த ஹிந்துவின் அறிக்கையின்படி, ஒரு வருடத்துக்கு பின் பிறப்பொருள் எதிரியின் அளவு அதிகரிக்கப்பட்டு மூன்றாவது மருந்தளவு தடுப்பூசி தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டது.
இதன்போது இரண்டாவது மருந்தளவுக்கு பின்னர் அவர்களின் உடல்களில் பிறப்பொருள் எதிரியின் அளவு இரு மடங்காக உயர்ந்திருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சடோக்ஸ் 1 என்.கோவ் 19 என்ற தடுப்பூசி அளவே, நீண்ட காலத்திற்குப் பிறகு கொடுக்கப்பட்ட இரண்டாவது அளவாக இருந்தது.
எனவே, குறுகிய காலத்தில் தடுப்பூசி பொருட்கள் பற்றாக்குறையாக இருக்கும்போது இது ஒரு சிறந்த உத்தி ஆகும் என எஸ்டராசெனெகா தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் மூன்றாவது தடுப்பூசி அளவு, SARS-COV-2 வைரஸ்களின் நடுநிலைப்படுத்தல், மேலும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் தொகைகளில் உள்ள மாறுபாடுகளுக்கு எதிரான செயல்திறனை அதிகரிக்க பயன்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.



















