யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடும் போது, சீன பிரஜைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார்.
எனினும் அவரது குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என ஆதாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனப் பிரஜை என சுமந்திரனால் அடையாளப்படுத்தப்பட்ட நபர், கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இஸ்லாமியர் என்பது தெரிய வந்துள்ளது. அக்கரைப்பற்றை சேர்ந்த இஸ்லாமிய மொஹமட் ஹனிபா என்பவரே சீனப் பிரஜை என சுமந்திரனால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறித்த நபரின் புகைப்படத்தை வெளியிட்டு, யாழ்ப்பாணத்தில் பல இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடும்போது சீன தொழிலாளர்களிற்கு வாய்ப்பளிப்பது ஏன் என கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சுமந்திரன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவினை தற்போது நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


















