தற்போதைய நிலைப்பாட்டில் சீனாவினுடைய அழுத்தம், சீனாவினுடைய வருகை இப்போது உள்ள அரசுகள் சீனாவை தங்களுடைய எஜமான் ஆக்குகின்ற சூழலிலே சிங்கள மக்களும் அதனை ஓரளவு ஏற்றுக்கொண்டிருக்கிற சூழலிலே தமிழர்களாகிய நாங்கள் இந்தியாவை நல்ல முறையிலே பயன்படுத்த வேண்டும் எனத் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியாவினுடைய பங்களிப்பு வரலாற்று ரீதியாகப் பார்க்கின்ற போது எங்களுடைய விடுதலை சம்பந்தமாக இந்திய கொண்டிருந்த அக்கறையைத் தெளிவாகக் காணமுடியும்.
எங்களுடைய தேசத்திலேயுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான கடமை, கடப்பாடு இந்தியாவுக்கு உண்டு.
குறிப்பாக வடக்கு கிழக்கின் கரையோரங்களெல்லாம் இந்தியாவின் பாதுகாப்பைப் பலப்படுத்துகின்ற ஒரு செயற்பாட்டைத் தமிழர்களாகிய நாங்கள் செய்து வருகிறோம் என்பதனை நான் குறிப்பிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.




















