தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 20 பேரை தனிமைப்படுத்துவதற்கு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பானந்துறை, பல்லேமுல்ல பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே குறித்த 20 பேரும் சிக்கினர்.
மேலும், தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்ததும் குறித்த நபர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதற்காக நேற்றைய தினம் நாட்டில் 433 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



















