சீனாவை அச்சுறுத்தி வந்த மலேரியா நோய் முற்றிலும் ஒழிந்து விட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளதுடன் அதற்காக சீவாவிர்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது.
1940ம் ஆண்டுகளில் ஆண்டுக்கு 3 கோடி பேர் மலேரியா காய்ச்சலுக்கு பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக ஒருவருக்கு கூட மலேரியா காய்ச்சல் பாதிக்கப்படாமல் சீனா சாதித்துள்ளது.
இது தொடர்பில் , உலகச் சுகாதார அமைப்பின் தலைவர் கூறுகையில் ‘ மலேரியா நோயிலிருந்து மீண்ட சீன மக்களுக்கு வாழ்த்துக்கள் என கூறியதுடன், மேலும், இந்த வெற்றி கடினமான உழைப்பின் பலனாகும். மிகத்துல்லிய நடவடிக்கையினால்தான் சீனாவினால் இதைச் சாதிக்க முடிந்துள்ளதாகவும், அத்துடன் இதன் மூலம் மலேரியா இல்லாத உலகை உருவாக்க முடியும் என்பதில் சீனா முன்னோடியாகத் திகழ்கிறது’ எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக மலேரியா காய்ச்சல் ஏற்படாவிட்டால் அந்த நாடுகள் உலகச் சுகாதார அமைப்பின் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் தெளிவான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப் பட வேண்டும். மேலும் மலேரியா மீண்டு ஏற்படாது என்பதற்கான நடவடிக்கைகளையும் காட்ட வேண்டும். சீனாவில் கடந்த 4 ஆண்டுகளில் ஒருவருக்கு கூட மலேரியா நோய் கண்டறியப்படவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை 1940-களில் ஆண்டு தோறும் 3 கோடி பேருக்கு மலேரியா கண்டறியப்பட்ட நிலையில் சீனா அதனை போராடி ஒழித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.