கனடாவில் அதிக வெப்பநிலை காரணமாக 233 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டு ஊடகங்கள் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரையிலான 4 நாட்களில் வெயிலின் தாக்கத்தால் 233 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் ஜூன் முதல் ஆகஸ்ட் மதம் வரை கோடைக்காலமாகும். இந்தாண்டு கோடைக்காலம் கடும் வெப்பமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் லிட்டனில் செவ்வாயக்கிழமை 49.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மிக அதிகபட்சமாக லைட்டான் நகரத்தில் 121 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருக்கிறது. இந்நிலையில், கடந்த நான்கு நாட்களில் அதிகரித்த வெப்பநிலை காரணமாக 233 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், மக்களை வீடுகளை விட்டு வர வேண்டாம் என்றும் குளிர்சாதன அறைகளில் இருக்குமாறு அந்நாட்டு அரசாங்கம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதிக குடிநீர் பருகும்படியும் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, அமெரிக்காவிலும் கடும் வெயில் காரணமாகா போர்ட்லேண்ட், ஓரிகான், சியாட்டில், வாஷிங்டன் ஆகிய இடங்களிலும் வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.