காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் தீவிர ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்து தாய் மற்றும் குழந்தையின் உயிரை காப்பாற்ற வைத்தியசாலை ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கர்ப்பணி பெண்ணில் வயிற்றில் ஏற்பட்ட கடுமையான வலி காரணமாக அவரது கணவர் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்தார்.
அந்த பெண்ணுக்கு இரத்த போக்கு ஏற்பட ஆரம்பித்துள்ளது. அவருக்கு குழந்தை பிறக்கவுள்ளதனை அறிந்த தாதி தனது வேலை நிறுத்த போராட்டம் குறித்து சிந்திக்காமல் தாயையும் குழந்தையும் காப்பாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்துள்ளார்.
வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை அறைக்குள் இந்த பிரசவம் பார்க்கப்பட்டு தாயும் குழந்தையும் பாதுகாப்பாக காப்பாற்றப்பட்டுள்ளதாக தாதி சங்கித்தின் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண்ணின் கணவர், மனைவிக்கு என்ன நடக்கின்றதென்றே அறியாமல் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளார். மிகவும் ஆபத்தான நிலையில் இந்த கர்ப்பிணி தாதியின் உதவியுடன் காப்பாற்றப்பட்டமை குறித்து மகிழ்ச்சியடைவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் போது ஆர்ப்பாட்டம் குறித்து சிந்திக்காமல் செயற்பட்ட தாதியை பலரும் பாராட்டியுள்னர்.