பிரபல பாலிவுட் நடிகை யாமி கவுதமுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியிருப்பது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
யாமி கவுதம் கடந்த ஜூன் 4ம் தேதி தான் திடீரென திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஷாக் கொடுத்திருந்தார் .
இந்நிலையில், FEMA (Foreign Exchange Management Act) எனும் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்திற்கு எதிராக மோசடி செய்துள்ளதாக நடிகை யாமி கவுதம் மீது புகார் எழுந்திருக்கிறது.
மேலும், ஒன்றரை கோடி ரூபாய் பணம் அந்நிய செலாவணி மோசடி மூலமாக நடிகையின் கணக்கில் சமீபத்தில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறையினர் அறிவித்துள்ளனர்.
வரும் ஜூலை 7ம் தேதிக்குள் அமலாக்கத் துறையிடம் நேரடியாக ஆஜராகி உரிய விளக்கம் தர வில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஏற்கனவே ஒரு முறை சம்மன் அனுப்பியதற்கு நடிகை தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லையாம். கடந்த ஜூன் 4ம் தேதி தான் நடிகை யாமி கவுதமுக்கும் இயக்குநர் ஆதித்யா தர்ருக்கும் திருமணம் நடைப்பெற்றது.
இருவரும் ஹனிமூன் பிசியில் இருக்கும் நிலையில், இப்படி புதுமண தம்பதிகளை தொல்லை செய்றாங்களே என யாமி கவுதமின் ரசிகர்கள்பதறி வருகின்றனர்.