உக்ரைன் நாட்டில் 80 வயது தோற்றத்துடன் அரியவகை நோயால் அவதிப்பட்டு வந்த 10 வயது சிறுமி பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
progeria என்ற அரியவகை நோயால் இறந்த சிறுமி தொடர்பில் மொத்த உக்ரைன் நாடும் கண்ணீரில் ஆழ்ந்துள்ளது. சிறுமி Iryna Khimich மறைவு தொடர்பில் அவரது 39 வயதான தாயாரே சமூக ஊடகத்தில் அறிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டின் Vinnytsia பகுதியை சேர்ந்த சிறுமி, தமது சிகிச்சைக்காக தனது ஓவியங்களை விற்று நிதி திரட்டி வந்துள்ளார். முக்கிய சிகிச்சைக்காக அமெரிக்கா திரும்ப வேண்டிய நிலையில், திடீரென்று சிறுமி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒருமுறை பாரிஸ் நகரத்திற்கு செல்ல வேண்டும், பிரான்சில் தமது ஓவியங்களை காட்சிப்படுத்த வேண்டும் என சிறுமி ஆசைப்பட்டுள்ளார் என தாயார் தெரிவித்துள்ளார்.
progeria என்ற அரியவகை நோயால் அவதிப்பட்டு வந்த சிறுமிக்கு, ஒவ்வொரு ஆண்டும் 10 ஆண்டுகளில் மனித உடலில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் ஏற்பட்டு வந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அவரது சிகிச்சைக்காக நிதியுதவி அளித்த பலரும் தங்கள் கவலையை பகிர்ந்து கொண்டுள்ளனர்.