இராணுவத்தை சிறையில் அடைத்து, சிறையிலிருந்த தீவிரவாதிகளை விடுதலை செய்ததன் மூலமே கடந்த காலத்தில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை ஸ்ரீலங்காவால் பெற்றுக்கொள்ள முடிந்ததாக, இராஜாங்க நிதி அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட 30இன் கீழ் ஒன்று தீர்மானத்திற்கு உடன்படுவதாக அப்போதைய அரசாங்கம் தெரிவித்ததாகவும், இது பொருளாதார ரீதியான நடவடிக்கைகள் அல்லவெனவும் மாறாக இது அரசியல் சார்ந்த விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



















