அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பைஸர் கொவிட் தடுப்பூசியின் ஒரு தொகுதி இன்று இலங்கை வந்துள்ளது.
இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட பைஸரின் முதல் தொகுதி இன்று (05) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இலங்கை கொள்வனவு செய்துள்ள 2 இலட்சம் தடுப்புசி டோஸ்களில் முதல் தொகுதியாக 26,000 பைஸர் தடுப்பூசி இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ளது.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த Pfizer தடுப்பூசியை தெற்காசிய பிராந்தியத்தில் ஒரு நாடு பெறுவது இதுவே முதல் முறையாகும்.