இலங்கையில் மறு அறிவித்தல் வரை எந்தவொரு பொதுக்கூட்டங்களோ ஆர்ப்பாட்டங்களோ நடத்த அரசாங்கம் தடை விதித்துள்ளது.
சுகாதார பணிப்பாளரினால் பொலிஸ் மா அதிபருக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது மக்கள் ஒன்றுக்கூடுவதனை தடுப்பதற்காக பொது மக்கள் ஒன்றுக்கூடுதல், ஆர்ப்பாட்டம் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதனால் கொவிட் நோய் வேகமாக பரவும் ஆபத்துக்கள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எனவே அவ்வாறான முறையில் மக்கள் ஒன்றுக் கூடுதல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துதல் போன்ற விடயங்கள் மீள் அறிவிப்பு வரை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தனிமைப்படுத்தல் உத்தரவு தொடர்பில் இலங்கை பொலிஸாரினால் செயற்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சேதன பசளையை ஊக்குவிக்கும் வகையில், இரசாயன உர இறக்குமதிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தடை விதித்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடு தழுவிய ரீதியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க தயாராகி வந்தமை குறிப்பிடத்தக்கது.