தொலைக்காட்சி, தொலைபேசி மற்றும் இலத்திரனியல் பொருட்களின் இறக்குமதியை தடை செய்யும் தீர்மானத்தை அரசாங்கம் எடுக்கவில்லை என அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பதிரன தெரிவித்துள்ளார்.
எனினும், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை கட்டுப்படுத்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகளில் புதிய கொள்கை திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி, தொலைப்பேசி மற்றும் இலத்திரனியல் பொருட்கள் இறக்குமதி செய்வதை தடை செய்யவது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பதிரன குறிப்பிட்டுள்ளார்.