யாழ்.காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவரின் பதிவு திருமண நிகழ்வில் பங்கேற்ற 52 குடும்பங்கள் சுகாதார பிரிவினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேற்படி பதிவுத் திருமணம் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் சுமார் 200 பேர்வரை கலந்து கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் மணமக்களின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் பதிவுத் திருமணத்தில் கலந்து கொண்டிருந்த 52 குடும்பங்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.