துபாயில் உலகின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றில் நங்கூரமிட்டப்பட்டிருந்த ஒரு கொள்கலன் கப்பலில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், உயிரிழப்பும் எதுவும் ஏற்படவில்லை உள்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அரேபிய தீபகற்பத்தின் கிழக்குப் பகுதியில் அமர்ந்திருக்கும் ஜெபல் அலி துறைமுகத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கப்பலில் இருந்த கொள்கலன் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பே தீப்பரவலுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது கப்பலில் இருந்த அனைத்து மாலுமிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் . தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுகத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் இந்த வெடிப்பு உணரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அந்த பகுதியிலுள்ள வீடுகளில் ஜன்னல், கதவுகளில் அசைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், “கப்பல்களின் இயல்பான இயக்கம் எந்தவித இடையூறும் இல்லாமல் தொடர்வதை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக” துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.
A fire caused by an explosion within a container on board a ship at Jebel Ali Port has been brought under control; no casualties have been reported: Dubai Media Office #WamNews pic.twitter.com/WklI6S4X0x
— WAM English (@WAMNEWS_ENG) July 7, 2021
الحريق تحت السيطرة ولا توجد أي وفيات أو إصابات جراء الحادث في ميناء جبل علي pic.twitter.com/cQAVRDSa5c
— Dubai Media Office (@DXBMediaOffice) July 7, 2021